பா.ஜ.க. அரசு தமிழக மீனவர்களை பாதுகாக்கவில்லை - வைகோ குற்றச்சாட்டு


பா.ஜ.க. அரசு தமிழக மீனவர்களை பாதுகாக்கவில்லை - வைகோ குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 21 Dec 2021 12:26 AM IST (Updated: 21 Dec 2021 12:26 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜ.க. அரசு தமிழக மீனவர்களை பாதுகாக்கவில்லை - வைகோ குற்றச்சாட்டு.

சென்னை,

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக மீனவர்கள் 55 பேரை இலங்கை கடற்படை கைது செய்து இருக்கின்றது. அவர்களுடைய 6 மீன்பிடி படகுகளை பறிமுதல் செய்துகொண்டு போயிருக்கின்றனர். 1980-களில் தொடங்கி 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாக்குதல்களில் 600-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படை சுட்டு கொன்றுவிட்டது. அன்று முதல் இன்று வரையிலும் நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு கூட்டத்தொடரிலும் இதுகுறித்து நான் பேசி வருகிறேன். கேள்விகள் கேட்டு வருகிறேன். நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு தமிழக மீனவர்களை பாதுகாக்கவில்லை. தீர்வு எதுவும் இல்லை. இந்திய கடற்படை தன் கடமையை செய்யவில்லை. இலங்கை கடற்படை சிறைபிடித்த 55 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் இலங்கை அரசுடன் தூதரக உறவுகளை இந்தியா முறித்துக்கொள்ள வேண்டும். தமிழக மீனவர்களுக்கு இழப்பீடு பெற்றுத் தருவதற்கு பன்னாட்டு நீதிமன்றத்தில் இலங்கை அரசு மீது வழக்கு தொடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story