அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்திருந்தால் அகவிலைப்படி வழங்கி இருப்போம் - ஓ.பன்னீர்செல்வம்
தமிழ்நாடு அரசின் வருவாயைப் பெருக்குவதிலோ, சீர்திருத்தங்களை மேற்கொள்வதிலோ, சிக்கனத்தைக் கடைபிடிப்பதிலோ எந்த நடவடிக்கையும் தி.மு.க. அரசு எடுத்ததாக தெரியவில்லை என ஓ பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.
சென்னை,
இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு ஊழியர்களுக்கு அதிமுக ஆட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பட்டியலிட்டுள்ளார். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்திருந்தால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி நிச்சயம் வழங்கப்பட்டிருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
புதிய ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள ஓ.பன்னீர்செல்வம், ஆட்சிக்கு வந்தவுடன் மத்திய அரசு அறிவித்த அகவிலைப்படியைக் கூட ஒழுங்காக தர இயலாத திறமையற்ற அரசாக திமுக அரசு விளங்கிக்கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசின் வருவாயை பெருக்குவதிலோ, சீர்திருத்தங்களை மேற்கொள்வதிலோ, சிக்கனத்தைக் கடைப்பிடிப்பதிலோ எந்த நடவடிக்கையும் திமுக அரசு எடுத்ததாக தெரியவில்லை எனவும் ஓ பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.
Related Tags :
Next Story