கோவை: நகையில் போலி 916 முத்திரையிடும் ஆசாமிகள் பிடிபட்டனர் - நகைகள் பறிமுதல்


கோவை: நகையில் போலி 916 முத்திரையிடும் ஆசாமிகள் பிடிபட்டனர் - நகைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 13 Jan 2022 8:20 AM GMT (Updated: 13 Jan 2022 8:20 AM GMT)

கோவை மாவட்டத்தில் நகையில் போலி 916 முத்திரையிடும் ஆசாமிகள் பிடிபட்டனர். அவர்களிடம் ரூ.11 லட்சம் மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கோவை,

பொங்கல் பண்டிகை காலங்களில் பொதுமக்கள் தங்க நகைகள் வாங்குவது வழக்கமானதாகும். இந்த நிலையில் பொதுமக்களின் ஆர்வத்தை பயன்படுத்தி தள்ளுபடி முறையில் தங்க நகைகள் தரப்படுமென நகை கடைகள் அறிவிக்கின்றன. 

நகை கடைகளில் தள்ளுபடி நியாயமான முறையில் தரப்பாட்டலும் இந்த பண்டிகை காலத்தினை பயன்படுத்தி போலி நகைகள் விற்கப்படுகின்றன. இந்நிலையில் இந்திய தர நிர்ணய அதிகாரி மீனாட்சி தலைமையில் 10 பேர் கொண்ட குழு கோவையில் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். 

அப்போது நகையில் போலி 916 முத்திரையிடும் ஆசாமிகளை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.11 லட்சம் மதிப்புள்ள நகைகளை பறிமுதல் செய்து, போலி முத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

Next Story