எம்.ஜி.ஆர் 105 வது பிறந்தநாள்: 'சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர்' - எடப்பாடி பழனிசாமி புகழாரம்


எம்.ஜி.ஆர் 105 வது பிறந்தநாள்: சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர் - எடப்பாடி பழனிசாமி புகழாரம்
x
தினத்தந்தி 17 Jan 2022 4:59 AM GMT (Updated: 2022-01-17T12:04:59+05:30)

எம்.ஜி.ஆர் 105 வது பிறந்தநாளை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி டுவீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சென்னை,

தமிழகத்தின் முன்னாள் முதல் அமைச்சர் பாரதரத்னா டாக்டர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.


இந்த நிலையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆர் பிறந்தநாளையொட்டி டுவீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் 'அள்ளி அள்ளிக் கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர், கடைநிலை தொழிலாளியையும் மதிக்கும் பண்பாளர், சரித்திர திட்டங்களால் தமிழகத்தின் தாயுமானவராய் வாழ்ந்து, கோடிக் கணக்கான இதயங்களில் அழியாப் புகழுடன் இதயதெய்வமாக வீற்றிருக்கும் எங்கள் புரட்சித்தலைவருக்கு 105 வது பிறந்தநாள் புகழ் வணக்கங்கள்' என்று கூறியுள்ளார்.

மேலும் அதிமுக தலைமையகத்தில் உள்ள எம்.ஜி.ஆரின் சிலைக்கு இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Next Story