நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: மாவட்ட கலெக்டர்களுடன் மாநிலத் தேர்தல் ஆணையர் ஆலோசனை


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 19 Jan 2022 1:58 PM GMT (Updated: 19 Jan 2022 1:58 PM GMT)

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மாவட்ட கலெக்டர்களுடன் மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார் ஆலோசனை நடத்தினார்.

சென்னை,

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் அடுத்த மாதம் 3-வது வாரத்தில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்தியது. இந்த கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை அமைதியான முறையில் நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் அனைத்துக்கட்சிகளுடன் ஆலோசனை நடத்தியது.

இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மாவட்ட கலெக்டர்களுடன் மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட எஸ்.பி.க்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

Next Story