மதிமுக-வை திமுக-வில் இணைக்க கோரி வைகோவுக்கு எதிராக மாவட்டச் செயலாளர்கள் போர்க்கொடி...!


மதிமுக-வை திமுக-வில் இணைக்க கோரி வைகோவுக்கு எதிராக மாவட்டச் செயலாளர்கள் போர்க்கொடி...!
x
தினத்தந்தி 21 March 2022 1:15 PM IST (Updated: 21 March 2022 1:54 PM IST)
t-max-icont-min-icon

மதிமுக-வை திமுக-வில் இணைக்க கோரி வைகோவுக்கு எதிராக மாவட்டச் செயலாளர்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட மதிமுக செயலாளர் சிவந்தியப்பன் விருதுநகர் மாவட்ட மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் செங்குட்டுவன் ஆகியோர் சிவகங்கையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மதிமுக பொதுச்செயலாளர் கட்சியின் கொள்கைகளுக்கு விரோதமாக செயல்பட்டு வருகிறார். இந்த கட்சி திமுக வில் இருந்து பிரியும் பொழுது திமுகவில் குடும்ப அரசியல் இருப்பதாக கூறி தான் பிரிந்தது. 

தற்பொழுது அதே நிலையில் தன்னுடைய மகனை துணைப் பொதுச் செயலாளராக கட்சியின் கொள்கைக்கு விரோதமாக வைகோ முடிவெடுத்து செயல்படுகிறார். எனவே அவரது இந்தக் கொள்கைக்கு தமிழகத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

எனவே இனி மதிமுக பொதுச் செயலாளருக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என்று முடிவெடுத்துள்ளோம். மேலும் மதிமுகவை கலைத்துவிட்டு திமுகவுடன் இணைய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

பேட்டியின்போது மாவட்ட துணைச் செயலாளர் தங்கபாண்டியன் உயர்நிலைக் குழு உறுப்பினர் அழகுசுந்தரம் நாகை மாவட்ட முன்னாள் செயலாளர் மோகன் சிவகங்கை மாவட்ட தலைவர் ஜெயபிரகாஷ் மற்றும் பாரதமணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

1 More update

Next Story