ராமேஸ்வரம் கோவிலில் வார விடுமுறையை முன்னிட்டு அலைமோதிய பக்தர்கள் கூட்டம்


ராமேஸ்வரம் கோவிலில் வார விடுமுறையை முன்னிட்டு அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
x
தினத்தந்தி 27 March 2022 3:59 PM IST (Updated: 27 March 2022 3:59 PM IST)
t-max-icont-min-icon

வார விடுமுறையையொட்டி ராமேஸ்வரம் கோவிலில் இன்று ஆயிரக்கணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்தனர்.

ராமநாதபுரம்,

ராமேஸ்வரம் கோவிலில் இன்றைய தினம் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்தக் கடலில் நீராடி முன்னோர்களுக்கு பூஜை செய்த சுற்றுலா பயணிகள், ராமநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசைகளில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

அதே போல் தனுஷ்கோடி, ராமர் பாதம், கலாம் நினைவகம், பாம்பன் பாலம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர். இதையடுத்து சுற்றுலா பயணிகள் அனைவரும் கொரோனா விதிகளை பின்பற்ற நகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க சீருடை அணியாத காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Next Story