முட்டை விலை திடீர் உயர்வு... மேலும் அதிகரிக்க வாய்ப்பு?


முட்டை விலை திடீர் உயர்வு... மேலும் அதிகரிக்க வாய்ப்பு?
x
தினத்தந்தி 7 April 2022 5:38 PM IST (Updated: 7 April 2022 5:38 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம் காரணமாக முட்டை உற்பத்தி குறைந்துள்ளது.

நாமக்கல்,

தமிழகத்தில் அதிக வெப்பம் காரணமாக முட்டை உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக முட்டை விலை 4 ரூபாய் 20 காசுகளாக உயர்ந்துள்ளது. 

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 4 ரூபாயாக இருந்த நிலையில், இன்று நாமக்கலில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை விலை 20 காசுகளாக அதிகரிக்கப்படுவதாக முடிவு செய்யப்பட்டது. அதன்படி தற்போது முட்டை விலை 4 ரூபாய் 20 காசுகளாக உயர்ந்துள்ளது. 

வெயிலின் தாக்கம் அதிகரித்திருப்பதன் காரணமாக முட்டை உற்பத்தி 10 சதவீதம் பாதித்திருப்பதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர். வரும் காலங்களில் முட்டை உற்பத்தி மேலும் குறையும் என்றும், இதன் காரணமாக கொள்முதல் விலை மேலும் அதிகரிக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். 


Next Story