அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக திருத்த மசோதா சட்டசபையில் தாக்கல்


அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக திருத்த மசோதா சட்டசபையில் தாக்கல்
x
தினத்தந்தி 5 May 2022 7:12 AM GMT (Updated: 2022-05-05T12:42:17+05:30)

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக திருத்த மசோதாவை சட்டசபையில் அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்தார்.

சென்னை, 

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு  கடந்த ஏப்ரல் மாதம்  6-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தினசரி துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் மற்றும் நிதிஒதுக்கீடு குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. 

இந்த தொடர்  மே 10 ஆம் தேதி வரை 22 நாள்கள் நடைபெற உள்ளன. இதுவரை பல்வேறு துறை சார்பிலான மானிய கோரிக்கை விவாங்கள் நடைபெற்று முடிவடைந்த நிலையில், இன்று (5-ம் தேதி)  போக்குவரத்து,  சுற்றுலா,  சுற்றுலாத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம்  நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த சூழலில் 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக திருத்த சட்ட முன்வடிவை பேரவையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த புதிய மசோதாவின்படி, அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக துணை வேந்தரை கவர்னருக்கு பதிலாக அரசே நியமிக்கும். ஏனெனில், அம்பேத்கர் சட்ட பல்கலைகழக வேந்தராக முதல்-அமைச்சர் இருக்கும் வகையில் இந்த திருத்த மசோதா உருவாக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் அம்பேத்கர் சட்ட பல்கலைகழக துணை வேந்தரை, மாநில அரசே நியமனம் செய்யும் சட்ட மசோதாவை சட்டசபையில் அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்துள்ளார்.  

Next Story