அன்புத்தம்பி செந்தில் பாலாஜி நீங்கள் குடியிருக்கிற குடிசையில் அண்ணன் தங்கிக்கிறேன்...! சீமான் கிண்டல்


அன்புத்தம்பி செந்தில் பாலாஜி நீங்கள் குடியிருக்கிற குடிசையில் அண்ணன் தங்கிக்கிறேன்...! சீமான் கிண்டல்
x
தினத்தந்தி 9 May 2022 4:15 PM IST (Updated: 9 May 2022 4:15 PM IST)
t-max-icont-min-icon

திமுக ஓராண்டு நிறைவு தொடர்பாக சீமான் பதிவிட்ட டுவிட்டுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் கொடுத்த நிலையில், அமைச்சரை குறிப்பிட்டு சீமான் மீண்டும் கிண்டலாக டுவிட் செய்துள்ளார்.

சென்னை

தி.மு.க. அரசு பொறுப்பேற்று கடந்த 7ம் தேதியோடு ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில், பலரும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். அதேவேளையில், எதிர்க்கட்சிகள் தி.மு.க. அரசின் இந்த ஓராண்டு ஆட்சியை விமர்சித்து கருத்து தெரிவித்தன. குறிப்பாக, சமீபத்திய பிரச்சினையான மின்வெட்டை குறிப்பிட்டு பலரும் சமூக ஊடகங்களில் தி.மு.க. அரசை விமர்சித்தன. 

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது டுவிட்டர் பக்கத்தில்,  

ஏப்பா சீமான்.. இந்த ஆட்சியின் ஒரு ஆண்டு சாதனையை டிவில போடுறாங்கலாம்.. அது என்னனு பார்க்கலாம்னு பாத்தா எழவு கரண்ட் இல்லப்பா.. அது தான் பெரியம்மா திராவிட மாடல்..!’ என விமர்சித்து பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில்பாலாஜி, கடும் கோடையிலும் உச்சபட்ச மின் தேவை இருந்த போதும் தமிழ்நாடு மின் வாரியம் மிகச் சிறப்பாகக் கையாண்டு வருகிறது.

அண்ணன் சமீபத்தில் குடியேறி இருக்கும் கடற்கரையோர சொகுசு பங்களாவின் மின் இணைப்பு எண்ணைக் கொடுத்தால் அங்கு 'உண்மையிலேயே’ மின் வெட்டு இருந்ததா என்பதை விசாரித்துச் சொல்கிறேன்” என சீமானை குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இதற்கு கிண்டலாக பதிலளித்திருக்கும் சீமான், தனது டுவிட்டர் பக்கத்தில், “மின்சாரத்துறை அமைச்சர் அன்புத்தம்பி செந்தில் பாலாஜி அவர்களுக்கு! அண்ணனின் கடற்கரையோர வாடகை சொகுசு பங்களாவில் நீங்கள் வந்து குடியிருங்கள். நீங்கள் ரொம்பநாளா குடியிருக்கிற 'குடிசையில' அண்ணன் தங்கிக்கொள்ள தயவுசெய்து அனுமதி கொடுங்கள்!” என பதிவிட்டுள்ளார்.



Next Story