ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்; தங்கும் விடுதிகளில் வாடகை அதிகரிப்பு


ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்; தங்கும் விடுதிகளில் வாடகை அதிகரிப்பு
x
தினத்தந்தி 14 May 2022 8:07 PM GMT (Updated: 2022-05-15T01:37:44+05:30)

சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்ததால், ஊட்டியின் சாலைகளில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

நீலகிரி,

தமிழகத்தில் தற்போது கோடைக்காலம் நிலவி வரும் நிலையில், ஊட்டியில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. ஊட்டியில் தற்போது கோடை சீசனை முன்னிட்டு 17-வது ரோஜா கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதனைக் காண நேற்று ஒரே நாளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குவிந்தனர். 

இதனால் ஊட்டியின் சாலைகளில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதே சமயம் அங்கு தங்கும் விடுதிகளின் வாடகை கட்டணங்களும் உயர்ந்துள்ளன. இன்று ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்பதால், ஊட்டியில் மேலும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story