மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் தொடரை நடத்த 18 குழுக்கள் நியமனம் - தமிழ்நாடு அரசு அரசாணை


மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் தொடரை நடத்த 18 குழுக்கள் நியமனம் - தமிழ்நாடு அரசு அரசாணை
x
தினத்தந்தி 14 May 2022 11:09 PM GMT (Updated: 2022-05-15T04:39:22+05:30)

தொடரை சிறப்பாக நடத்தி முடிக்க ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் தலைமையில் 18 குழுக்கள் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடர், வரும் ஜூலை 28-ந்தேதி முதல் ஆகஸ்ட் 10-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரை சிறப்பாக நடத்தி முடிக்க ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் தலைமையில் 18 குழுக்கள் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது;-

“செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க வரும் வீரர் வீராங்கனைகள், முக்கிய பிரமுகர்கனை வரவேற்க வரவேற்பு குழு சாலை மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள தனிக்குழு, போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளை கண்காணிக்க தனிக்குழு என மொத்தம் 18 வகையான குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்களின் தலைவர்களாக சம்மபந்தப்பட்ட துறைகளை சேர்ந்த செயலாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

வரவேற்பு குழுவுக்கு டி.ஜெகநாதனும், போக்குவரத்துக்கு கே.கோபாலும், ஸ்பான்சர் ஷிப்புக்கு எஸ்.கிருஷ்ணனும், தொடக்க மற்றும் நிறைவு விழா குழுவுக்கு டி.கார்த்திகேயனும், சாலை, குடிநீர் சப்ளை, தூய்மை பணிக்கு சிவ்தாஸ் மீனாவும், விருந்தோம்பல் நிகழ்ச்சி மேலாண்மை, கலைநிகழ்ச்சி, பரிசளிப்பு ஆகியவற்றின் குழுவுக்கு பி.சந்திரமோகனும் தலைவர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

ஊடகம், விளம்பரத்துக்கு வி.பி.ஜெயசீலனும், பாதுகாப்புக்கு டி.ஜி.பி.சைலேந்திரபாபுவும், தங்குமிடம், உணவுக்கு குமார் ஜெயந்தும், சுகாதாரம், மருத்துவ பணிக்கு பி.செந்தில்குமாரும், அரங்கு ஏற்பாடுக்கு தயாளந்த் கட்டாரியாவும், நிதி, டெண்டருக்கு பிரசாந்த் வாட்நேரையும், மின்சாரத்துக்கு ராஜேஷ் லக்கானியும், சாலை மேம்பாட்டுக்கு தீரஜ்குமாரும், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்பதற்கான குழுவுக்கு காகர்லா உஷாவும், சர்வதேச செஸ் கூட்டமைப்புக்கு ஆர்.ஆனந்த குமாரும், செஸ் ஒலிம்பியாட் கட்டுப்பாட்டு அறைக்கு ஏ.கே.கமல்கிஷோரும், தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப பணிக்கு நீரஜ் மித்தலும் தலைவர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.”

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story