சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 23 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது


சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 23 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது
x

பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை,

சென்னை பெருநகரில் கடந்த ஒரு வாரத்தில் 23 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு உள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை அறிக்கையின் மூலம் தெரிவித்து உள்ளது.

கவர்னர் மாளிகையில் பெட்ரோல் வெடிகுண்டு வீசிய கருக்கா வினோத் மற்றும் ககன் போத்ரா உள்ளிட்ட 23 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story