நகைக்கடையில் 281 பவுன் கொள்ளை


நகைக்கடையில் 281 பவுன் கொள்ளை
x

கள்ளக்குறிச்சி அருகே நகைக்கடையின் பூட்டை உடைத்து 281 பவுன் நகை மற்றும் 30 கிலோ வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த துணிகர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 47). இவர் சேலம் மெயின்ரோட்டில் ஸ்ரீகுமரன் ஸ்வர்ண மகால் என்ற பெயரில் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி அருகே புக்கிரவாரி புதூரில் மற்றொரு நகைக்கடையை திறந்தார்.

புதிய கடை திறந்தவுடன் அங்கு அதற்கான வேலை ஆட்களை நியமித்து தினமும் 2 கடைகளையும் லோகநாதன் கவனித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்று மாலை 6 மணிக்கு புதிய கடையில் இருந்த அனைத்து நகைகளையும் லாக்கர் அறையில் வைத்து பூட்டினார். பின்னர் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார்.

பூட்டு உடைக்கப்பட்டு...

இந்த நிலையில் நேற்று காலை கடை கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இது பற்றி தகவல் அறிந்த லோகநாதன் பதறியடித்து கொண்டு கடைக்கு வந்தார். பின்னர் அவர் கடைக்குள் சென்று பார்த்த போது லாக்கர் அறை பூட்டும் திறந்து கிடந்தது.

மேலும் அங்கிருந்த தாலிசெயின், மோதிரம், தோடு, மூக்குத்தி, நெக்லஸ், ஆரம், நாணயம் உள்பட மொத்தம் 281 பவுன் நகைகள் மற்றும் வெள்ளி கொலுசு, அரைஞான் கொடி என மொத்தம் 30 கிலோ வெள்ளி பொருட்களை காணவில்லை.

அப்போது தான் அவருக்கு நகை, வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இது தவிர கல்லாபெட்டியில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் ரொக்கத்தையும் மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

மோப்ப நாய்

இதனால் அதிர்ச்சியில் உறைந்து செய்வதறியாது திகைத்து நின்ற லோநாதன், சம்பவம் குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், லோகநாதன் கடையை பூட்டிவிட்டு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.

இதற்கிடையே மோப்ப நாய் ராக்கி சம்பவம் நடந்த இடத்திற்கு வரவழைக்கப்பட்டது. அது கடையில் இருந்து மோப்பம் பிடித்தபடி அங்குள்ள வயல்வெளி பகுதி வழியாக வானவரெட்டி காலனி வரை சென்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

ரூ.1¼ கோடி..

தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் ராஜவேல், ஜெய்சங்கர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து கடையில் கிடைத்த தடயங்கள் மற்றும் கைரேகைகளை சேகரித்தனர். கொள்ளைபோன நகைகளின் மொத்த மதிப்பு சுமார் ரூ.1 கோடியே 35 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

இது குறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

3 தனிப்படைகள் அமைப்பு

இந்த வழக்கில் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் நடந்த இந்த கொள்ளை சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கண்காணிப்பு கேமரா இணைப்பு துண்டிப்பு

திட்டமிட்டு நடந்த இந்த கொள்ளை வழக்கில் நகைக்கடையில் கொள்ளையடிக்க வந்த மர்மநபர்கள் முதலில் கடை அருகில் இருந்த தேசிய மயமாக்கப்பட்ட வங்கி முன்பு இருந்த கண்காணிப்பு கேமராவின் இணைப்பை துண்டித்துள்ளனர். பின்னர் நகைக்கடையின் முன்பு இருந்த கண்காணிப்பு கேமராவின் இணைப்பையும் துண்டித்துள்ளனர். இதையடுத்து பூட்டை உடைத்து கடைக்குள் சென்றஅவர்கள், அங்கிருந்த கம்ப்யூட்டரின் ஹார்ட்டிஸ்கையும் கழட்டி கையோடு கொண்டு சென்றுள்ளனர். இதனால் நகையை கொள்ளையடித்து சென்றவர்களை அடையாளம் காண்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.நகைக்கடையில் 281 பவுன் கொள்ளைநகைக்கடையில் 281 பவுன் கொள்ளைநகைக்கடையில் 281 பவுன் கொள்ளைநகைக்கடையில் 281 பவுன் கொள்ளைநகைக்கடையில் 281 பவுன் கொள்ளைநகைக்கடையில் 281 பவுன் கொள்ளைநகைக்கடையில் 281 பவுன் கொள்ளைநகைக்கடையில் 281 பவுன் கொள்ளைநகைக்கடையில் 281 பவுன் கொள்ளை

தொடர் கொள்ளை சம்பவத்தால் பொதுமக்கள் அச்சம்

கள்ளக்குறிச்சி அருகே தியாகதுருகத்தில் புக்குளம் கிராமத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஒரு வீட்டில் 11 பவுன் நகைகளையும், அதனைத்தொடர்ந்து இந்திலியில் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகைகளையும் மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

இந்த நிலையில் புக்கிரவாரி புதூரில் நகைக்கடையின் பூட்டை உடைத்து 281 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.


Next Story