நவோதயா பள்ளி விடுதியில் 3 மாணவிகள் தற்கொலை முயற்சி -போலீசார் விசாரணை
காரைக்கால் அருகே வரிச்சிகுடி ராயன்பாளையத்தில் மத்திய அரசின் நவோதயா பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
காரைக்கால்,
காரைக்கால் அருகே வரிச்சிகுடி ராயன்பாளையத்தில் மத்திய அரசின் நவோதயா பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு விடுதியில் தங்கியிருந்து படிக்கும் 6-ம் வகுப்பு மாணவிகள் 3 பேர் விடுதியில் வைத்து காலணிக்கு பாலீஸ் போடும் பேஸ்ட்டை கரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மாணவிகள் சோகமாக காணப்பட்டனர். இதுகுறித்து அறிந்த பள்ளி நிர்வாகம் உடனடியாக பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு பதறியடித்து வந்த பெற்றோர் மாணவிகளை மீட்டு சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது புத்தாண்டு கொண்டாட மாணவிகள் ஊருக்கு செல்ல விடுமுறை கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பள்ளி நிர்வாகம் விடுமுறை கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் மனமுடைந்த 3 மாணவிகளும் காலணிக்கு போடும் பேஸ்ட்டை கரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.