டிராக்டர் திருடிய வழக்கில் 3 பேர் கைது


எருமப்பட்டி அருகே டிராக்டர் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்

எருமப்பட்டி

டிராக்டர் திருட்டு

எருமப்பட்டி அருகே உள்ள வரதராஜபுரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் இளையராஜா (வயது 34). இவர் கடந்த மாதம் 24-ந் தேதி இரவு இவருக்கு சொந்தமான டிராக்டர் அங்குள்ள கோவில் முன்பு நிறுத்தி விட்டு வீட்டில் தூங்கி உள்ளார். அடுத்த நாள் எழுந்து பார்த்தபொழுது டிராக்டர் காணாமல் போனது தெரியவந்தது.

அதிர்ச்சி அடைந்த இளையராஜா காணாமல் போன டிராக்டர் பல இடங்களில் தேடி பார்த்துள்ளார். எங்கு தேடியும் கிடைக்காததால் எருமப்பட்டி போலீசில் இளையராஜா புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் உதவி ஆய்வாளர் பூபதி தலைமையில் தனிப்படை அமைத்து காணாமல் போன அன்று இரவு பதிவான சி.சி.டி.வி. காட்சிகளை பல்வேறு இடங்களில் சேகரித்து ஆய்வு செய்தார்.

3 பேர் கைது

இந்த ஆய்வில் நான்கு பேர் கொண்ட கும்பல் டிராக்டர் திருடி கொண்டு செல்வது பதிவாகி இருந்தது. இது குறித்து போலீஸ் நடத்திய விசாரணையில் வரதராஜபுரத்தை சேர்ந்த செந்தில்குமார் (33) என்பவர் டிராக்டரை திருடி சென்று தோட்டத்தில் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.

இதை அடுத்து அவரை கைது செய்த போலீசார் அவருக்கு உடந்தையாக இருந்த மூவானூர் வேங்கையாபுரத்தைச் சேர்ந்த திருப்பதி (29) செல்லிபாளையம் பாவாயி அம்மன் கோவிலை சேர்ந்த வேல்முருகன் (42) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவரிடம் இருந்த டிராக்டரை பறிமுதல் செய்தனர். மேலும் டிராக்டர் திருட்டில் உடந்தையாக இருந்த துறையூர் கலிங்க முதலியார் தெருவை சேர்ந்த ஆனந்தன் (45) என்பவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.


Next Story