புகையிலை பொருட்கள் விற்ற 3 கடை உரிமையாளா்களுக்கு அபராதம்
கம்மாபுரம் அருகே புகையிலை பொருட்கள் விற்ற 3 கடை உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடலூர்
கம்மாபுரம்;
கம்மாபுரம் பகுதியில் உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக சுகாதாரத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கம்மாபுரம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாண்டியராஜூ தலைமையிலான சுகாதார ஆய்வாளர்கள் முதனை, விருத்தகிரிக்குப்பம் மற்றும் இருப்புக்குறிச்சி ஆகிய பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது முதனை பகுதியில் 3 கடைகளில் புகையிலை பொருட்கள் விற்றது தெரியவந்தது. இதையடுத்து கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்த அதிகாரிகள், புகையிலை பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர். அப்போது சுகாதார ஆய்வாளர்கள் இளங்கோவன், கலியபெருமாள், அன்புராஜ், ரஞ்சித்குமார், சூர்யபிரகாஷ், அர்ணால்டு ஜான்சன், கிரினாத், விஜயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story