சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை தட்டிகேட்ட பெண் இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல் விடுத்த 4 பேர் கைது


சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை தட்டிகேட்ட பெண் இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல் விடுத்த 4 பேர் கைது
x

சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை தட்டிகேட்ட பெண் இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல் விடுத்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி மற்றும் போலீசார் நேற்று திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் உத்தரவின் பேரில், பெரியகுப்பம் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது பெரியகுப்பம் மேம்பாலம் கீழ் இருந்த 5 பேர் கொண்ட கும்பல் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டதை கண்டனர்.

அதை தொடர்ந்து போலீசார் அங்கு இருந்த 5 பேரிடம் இது சம்பந்தமாக விசாரணை செய்தனர்.

அப்போது அங்கு இருந்த மாதவரம் ரிங் ரோடு பகுதியை சேர்ந்த ஜானகிராமன் (வயது 37), சென்னை வெற்றி நகரை சேர்ந்ததமிழ்வாணன் (27), ஸ்ரீதர் (36), திருவள்ளூர் பெரிய குப்பத்தை சேர்ந்த முத்து (48) மற்றும் ஒருவர் போலீசாரிடம் தகராறு செய்தனர். மேலும் அவர்கள் போலீசாரை தடுத்து பணி செய்ய விடாமல் மிரட்டினார்கள்.

இது தொடர்பாக திருவள்ளூர் டவுன் போலீசார் ஜானகிராமன், தமிழ்வாணன், ஸ்ரீதர், முத்து ஆகியோரை கைது செய்தனர். தப்பி ஓடியவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

மேலும் அவர்களிடமிருந்து காட்டன் சீட்டு கட்டுகள் 20 மற்றும் ரொக்கப் பணம் ரூ.16 ஆயிரத்து 162- ஐ போலீசார் கைப்பற்றினர்.


Next Story