கொலை வழக்கில் சிக்கிய 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது


கொலை வழக்கில் சிக்கிய 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது
x

சிவகங்கை மாவட்டத்தில் கொலை வழக்குகளில் தொடர்புடைய 5 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

சிவகங்கை

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் கொலை வழக்குகளில் தொடர்புடைய 5 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

ெபண் படுகொலை

சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை அருகில் கடந்த ஏப்ரல் மாதம் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் புதுக்கோட்டை மாவட்டம் கல்லூர் சுதந்திரபுரத்தைச் சேர்ந்த தேவா என்ற மணிகண்டன்(வயது23) என்பவரை சாக்கோட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கைதான தேவா என்ற மணிகண்டனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் பரிந்துரை செய்தார். இதைத்தொடர்ந்து தேவா என்ற மணிகண்டனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் மதுசூதன்ரெட்டி உத்தரவிட்டார்.

4 பேர் கைது

இதேபோல கடந்த மார்ச் மாதம் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை அடுத்த வி.புதுக்குளம் அருகில் முன்விரோதத்தில் பழிக்குப்பழியாக மருது பாண்டி என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக மானாமதுரை சிப்காட் போலீசார் சிவகங்கையை அடுத்த கீழ வாணியன் குடியைச் சேர்ந்த மணிவண்ணன் (19), சுனித் என்ற ராஜகுமார் (23) மற்றும் வைரவன்பட்டி சேர்ந்த பால்பாண்டி (22), கருப்பு (19) ஆகிய 4 பேரை கைது செய்தனர். இந்த 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரை செய்தார். இதனைத் தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் கூறியதாவது:-

சிவகங்கை மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 26 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படும் வகையிலான சம்பவங்களில் ஈடுபடுவர்கள் மீதும் கொலை, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடுபவர்களும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.எனவே சிவகங்கை மாவட்டத்தில் சமூக விரோத செயலில் ஈடுபடுபவர்கள் மற்றும் சாதிய பிரச்சினைகளில் ஈடுபடுவோர் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story