திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் 5 ஜோடிகளுக்கு திருமணம்


திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் 5 ஜோடிகளுக்கு திருமணம்
x

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் 5 ஜோடிகளுக்கு அமைச்சர் ரகுபதி திருமணம் நடத்தி வைத்தார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் ஏழை குடும்பத்தை சேர்ந்த 5 ஜோடிகளுக்கு திருமண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார். மேலும் சீர்வரிசை பொருட்களை மணமக்களுக்கு வழங்கினார். இந்தநிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில், உதவி ஆணையர் (இந்து சமய அறநிலையத்துறை) அனிதா, கோவில் செயல் அலுவலர் முத்துராமன், மேற்பார்வையாளர்கள் தட்சிணாமூர்த்தி, வைரவன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story