கோவில் திருவிழாவில் 500 கிடா வெட்டி வழிபாடு


கோவில் திருவிழாவில் 500 கிடா வெட்டி வழிபாடு
x
தினத்தந்தி 23 July 2023 7:30 PM GMT (Updated: 23 July 2023 7:30 PM GMT)

இடையக்கோட்டை அருகே கோவில் திருவிழாவில் 500 கிடாய்கள் வெட்டி வழிபாடு நடந்தது. இந்த விழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்றனர்.

திண்டுக்கல்

500 கிடாய்கள்

ஒட்டன்சத்திரம் தாலுகா இடையக்கோட்டை அருகே பிரசித்தி பெற்ற மாம்பாறையில் முனியப்பன் கோவில் உள்ளது. இந்த முனியப்பன் கோவிலில் ஆண்கள் மட்டுமே வழிபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நிதி நிறுவனம் நடத்துபவர்கள் வராக்கடன்களை பெயர், கடன் தொகையுடன் சீட்டில் எழுதி மூலவர் முன்பு உள்ள வேல்களில் கட்டி விடுகின்றனர்.

வேண்டுதல் நிறைவேறி கடன் தொகை முழுவதும் வசூலாகி விடுவதாக ஐதீகம் உள்ளது. இந்த கோவிலில் ஆடி முதல் ஞாயிற்றுக்கிழமையைெயாட்டி ேநற்று 500 கிடா மற்றும் சேவல்களை பலியிட்டு ஆண் பக்தர்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். பலியிட்ட கிடாக்களையும், சேவல்களையும் ஆண்களே சமைத்து மதுபாட்டில்களுடன் முனியப்ப சாமிக்கு படைத்து வழிபாடு செய்தனர்.

மதுபான படையல்

பின்னர் படையலிட்ட மதுபானமும், ஆட்டுக்கறியையும் சாப்பிட்டது போக மிச்சம் இருப்பதை வீட்டுக்கு எடுத்துப் போகக்கூடாது என்பது சம்பிரதாயம். இதனால் ஆண்கள் அனைவரும் கோவிலில் சாமிக்கு படைத்த உணவையும், மதுவையும் சாப்பிட்டனர். பின்பு மீதமுள்ள மதுபானம், ஆட்டுக்கறி, சேவல் இறைச்சியை குழிதோண்டிப் புதைத்தனர்.

விழாவில் ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் மற்றும் கரூர், திருப்பூர், அரவக்குறிச்சி, நாமக்கல், பரமத்திவேலூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story