லாரியில் கடத்திய 6 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


லாரியில் கடத்திய 6 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 11 Oct 2023 7:30 PM GMT (Updated: 11 Oct 2023 7:30 PM GMT)

திருப்பத்தூரில் இருந்து கர்நாடகாவிற்கு லாரியில் கடத்தப்பட்ட 6 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்க முயன்றவர் கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:-

திருப்பத்தூரில் இருந்து கர்நாடகாவிற்கு லாரியில் கடத்தப்பட்ட 6 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்க முயன்றவர் கைது செய்யப்பட்டார்.

வாகன சோதனை

கிருஷ்ணகிரி மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திவாகர் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு சென்னை- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சுபேதார் மேடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் லாரியில் ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து லாரி டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

6 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

அதில் அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா பெரிய தள்ளப்பாடியை சேர்ந்த காளிதாஸ் (வயது 40) என தெரிய வந்தது. மேலும் திருப்பத்தூர், வாணியம்பாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி கர்நாடகாவிற்கு கொண்டு சென்று அங்கு அதிக விலைக்கு விற்பனை செய்ய முயன்றது தெரிய வந்தது.

இதையடுத்து காளிதாசை கைது செய்த போலீசார், லாரி மற்றும் 40 கிலோ எடை கொண்ட 152 மூட்டைகளில் இருந்து 6 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக லாரியின் உரிமையாளரான திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த சுரேஷ் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.


Next Story