வேலூர் காகிதபட்டறையில் உள்ள அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து 7 சிறார்கள் தப்பி ஓட்டம்
எஞ்சிய 5 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
வேலூர்,
வேலூர் காகித பட்டறை பகுதியில் சமூக பாதுகாப்பு துறையின் கீழ் அரசின் பாதுகாப்பு இடம் செயல்படு வருகிறது. இந்த இடத்தில் 18 -21 வயது வரையுள்ள குற்றச்செயல்களில் ஈடுபட்ட இளஞ்சிறார் கைதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கடந்த மார்ச் 27ந்தேதி இங்கிருந்து 6 இளஞ்சிறார் கைதிகள் தப்பியோடினர். அவர்களில் 5 பேர் மீட்கப்பட்ட நிலையில், எஞ்சிய ஒருவரை மட்டும் போலீசார் தேடி வருகின்றனர்.
இதனிடையே நேற்று அரசினர் பாதுகாப்பு பகுதியில் இருந்து மேலும் 7 பேர் தப்பியோடியுள்ளனர். இந்த 7 பேரில் இருவரை போலீசார் மடக்கிப்பிடித்துள்ளனர். எஞ்சிய 5 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாகவும், இளஞ்சிறார்களுக்கு கொடுக்கப்படும் சலுகைகளை அவர்கள் தவறாக பயன்படுத்துவதாகவும், அங்குள்ள ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story