கடலூர் மாவட்டத்தில் புதிதாக 7 பேருக்கு கொரோனா பாதிப்பு
கடலூர் மாவட்டத்தில் புதிதாக 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
கடலூர்
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 76 ஆயிரத்து 99 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில், புதிதாக 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 76 ஆயிரத்து 106 ஆக உயர்ந்தது. நேற்று முன்தினம் வரை 75 ஆயிரத்து 166 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நேற்று 4 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
நேற்று வரை கொரோனா பாதித்த 36 பேர் கடலூர் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வெளி மாவட்டத்தை சேர்ந்த 2 பேரும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதன் மூலம் 38 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
Related Tags :
Next Story