கோவிலுக்குள் கட்டை பையில் கிடந்த பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை
திருவண்ணாமலை அருகே கோவிலுக்குள் கட்டை பையில் கிடந்த பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருகில் உள்ள அத்தியந்தல் கிராமத்தில் கெங்கையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் வளாகத்தில் இன்று காலை ஆள் நடமாட்டம் இல்லாத போது குழந்தை ஒன்று அழுது உள்ளது. அப்போது அந்த வழியாக சென்ற அக்கம்பக்கத்தினர் குழந்தை அழும் குரல் கேட்டு கோவிலுக்குள் சென்று பார்த்து உள்ளனர்.
அங்கு ஒரு கட்டை பையில் பிறந்து சுமார் 3 நாட்களே ஆன ஆண் குழந்தை ஒன்று ஆதரவற்ற நிலையில் கிடந்து உள்ளது. பின்னர் அந்த குழந்தைகள் அவர்கள் மீட்டனர். மேலும் இது குறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசாரும், 108 ஆம்புலன்சிற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குழந்தையின் தாய் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். மேலும் 108 ஆம்புலன்சு மூலம் குழந்தை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story