பெருந்துறை கோட்டை மாரியம்மன்- முனியப்பசாமி கோவில் கும்பாபிஷேகம்


பெருந்துறை கோட்டை மாரியம்மன்- முனியப்பசாமி  கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 20 Aug 2023 8:49 PM GMT (Updated: 20 Aug 2023 8:50 PM GMT)

பெருந்துறை கோட்டை மாரியம்மன், முனியப்ப சாமி கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

ஈரோடு

பெருந்துறை,

பெருந்துறை கோட்டை மாரியம்மன், முனியப்ப சாமி கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

கோட்டை மாரியம்மன்- முனியப்பசாமி கோவில்

பெருந்துறையில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன், முனியப்ப சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. திருப்பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து கும்பாபிஷேக விழா கடந்த 17-ந் தேதி கிராம சாந்தியுடன் தொடங்கியது. 18-ந் தேதி கணபதி ஹோமம், முதல் கால யாக பூஜை நடைபெற்றது.

நேற்று முன்தினம் 2-ம் கால யாக பூஜை மற்றும் 3-ம் கால யாக பூஜை ஆகியவையும் நடந்தது.

கும்பாபிஷேகம்

நேற்று காலை 4-ம் கால யாக பூஜை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க யாக சாலையில் இருந்து புனிதநீர் நிறைந்த தீர்த்தக்குடங்களை அர்ச்சகர்கள் கொண்டு சென்றனர். முதலில் முனியப்ப சாமி கோவில் கோபுர கலசத்துக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் மாரியம்மன் கோவில் கோபுரத்துக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அப்போது பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து மாரியம்மன், முனியப்பன் சாமிக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

அன்னதானம்

விழாவில் பெருந்துறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர். விழாவில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதையொட்டி பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மசூதாபேகம் (சட்டம் -ஒழுங்கு), பெரியசாமி (போக்குவரத்து) மற்றும் நூற்றுக்கணக்காக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Related Tags :
Next Story