சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு


சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 1 Jun 2023 1:26 AM IST (Updated: 2 Jun 2023 12:41 PM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் அருகே சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

திருச்சி

திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலையில் அம்மா மண்டபம் சாலையில் புங்கை மரம் ஒன்று இருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் அந்த மரம் வேருடன் சரிந்து சாலையின் நடுவே விழுந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மாற்றுப்பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.

இதனைதொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்தனர். இதையடுத்து, ஸ்ரீரங்கம் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொக்லைன் எந்திரம் மூலம் மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.


Next Story