ராணிப்பேட்டையில் காதலை ஏற்க மறுத்த மாணவியின் கழுத்தை அறுத்த இளைஞர்


ராணிப்பேட்டையில் காதலை ஏற்க மறுத்த மாணவியின் கழுத்தை அறுத்த இளைஞர்
x

பிளஸ் 1 படிக்கும் மாணவி காதலை ஏற்க மறுத்ததால் இளைஞர் ஒருவர் அந்த மாணவியின் கழுத்தை அறுத்துள்ளார்.

ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த சென்னசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த பிளஸ் 1 படிக்கும் மாணவியை அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்ற இளைஞர் ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் மாணவியின் குடும்பத்தினருக்கு தெரியவந்ததையடுத்து, அவரை உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இதையடுத்து ஒரு மாதத்திற்குப் பிறகு மாணவி மீண்டும் சொந்த ஊர் திரும்பிய போது, அந்த மாணவியிடம் விஜயகுமார் பேச முயற்சித்துள்ளார்.

ஆனால் மாணவி பேச மறுத்ததால் ஆத்திரமடைந்த விஜயகுமார், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் படுகாயமடைந்த மாணவிக்கு தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ராணிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story