பள்ளிபாளையம் அருகே விபத்தில் பெண் பலி கணவர் படுகாயம்


பள்ளிபாளையம் அருகே  விபத்தில் பெண் பலி  கணவர் படுகாயம்
x

பள்ளிபாளையம் அருகே விபத்தில் பெண் பலி கணவர் படுகாயம்

நாமக்கல்

பள்ளிபாளையம்:

பள்ளிபாளையம் அருகே உள்ள சவுதாபுரம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 64). இவருடைய மனைவி தவமணி (60). கணவன், மனைவி இருவரும் நூல் மில்லில் தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை இருவரும் நூல் மில்லுக்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது சவுதாபுரம் அரசு பள்ளி அருகே சென்றபோது, சங்ககிரி செல்லும் அரசு டவுன் பஸ், மொபட் மீது மோதுவது போல் வந்ததாக தெரிகிறது. இதனால் மொபட்டை பழனிசாமி திருப்பியபோது நிலைதடுமாறி 2 பேரும் தவறி கீழே விழுந்தனர். இதில் தவமணி கீழே விழுந்ததில் பஸ் சக்கரத்தில் சிக்கி உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். பழனிசாமி படுகாயம் அடைந்தார்.

தகவல் அறிந்து சென்ற பள்ளிபாளையம் போலீசார் படுகாயம் அடைந்த பழனிசாமியை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலியான தவமணியின் உடலை மீட்டு சிகிச்சைக்காக பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story