எக்காரணம் கொண்டும் தமிழ்நாட்டில் தீவிரவாத செயலை அனுமதிக்க முடியாது - அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி


எக்காரணம் கொண்டும் தமிழ்நாட்டில் தீவிரவாத செயலை அனுமதிக்க முடியாது - அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி
x

எக்காரணம் கொண்டும் தமிழ்நாட்டில் தீவிரவாத செயலை அனுமதிக்க முடியாது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

தூத்துக்குடி,

கோவை கார் வெடிப்பு சம்பவம் குறித்து தூத்துக்குடியில் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு விவகாரத்தில் தமிழக போலீசாரின் நடவடிக்கை பாராட்டுக்குரியது என என்.ஐ.ஏ. கூறியுள்ளது. தமிழக போலீசாருடன் இணைந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை கார் சிலிண்டர் வெடிப்பு விவகாரத்தினை பொறுத்தவரையில், எல்லா விசாரணைகளுக்கும் அரசு முழு ஒத்துழைப்பு அளித்து அனைத்து விசாரணை ஆவணங்களையும் என்.ஐ.ஏ.விடம் ஒப்படைத்துள்ளது.


எக்காரணம் கொண்டும் தமிழ்நாட்டில் தீவிரவாத செயலை அனுமதிக்க முடியாது; இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களின் முழு விவரங்களும் 4 நாட்களில் திரட்டி என்.ஐ.ஏ.வுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு காவல்துறை விழிப்போடு இருந்ததால் தான் கோவையில் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.


இந்த வழக்கு காலதாமதமின்றி என்.ஐ.ஏ.-விடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தமிழக காவல்துறையின் விசாரணையின் போது என்.ஐ.ஏ. மற்றும் உளவுத்துறை உடன் இருந்தது. கோவை குண்டு வெடிப்பு பற்றி முன்கூட்டியே எந்த தகவலையும் என்.ஐ.ஏ தரவில்லை. மத்திய புலனாய்வுத் துறையுடன் இணைந்து மாநில் உளவுத்துறை செயல்பட்டது. கவர்னர் தேவையில்லாமல் பேசி வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story