மாசு கட்டுப்பாடு நிபந்தனைகளை கடைபிடிக்க வேண்டும்ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தல்


மாசு கட்டுப்பாடு நிபந்தனைகளை கடைபிடிக்க வேண்டும்ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தல்
x

விநாயகர் சிலைகளை பூஜைக்கு வைக்கும்போது மாசு கட்டுப்பாடு நிபந்தனைகளை கடைபிடிக்க வேண்டும் ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தல்

கன்னியாகுமரி

தக்கலை,

குமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியன்று விநாயகர் சிலைகளை பூஜைக்கு வைப்பது, விசர்ஜனம் செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று மாலையில் தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. சப்-கலெக்டர் கவுசிக் தலைமை தாங்கினார். உதவி கலெக்டர் (பயிற்சி) ரஜட் பீட்டன், போலீஸ் துணை சூப்பிரண்டுகள் உதயசூரியன், தங்கராமன், தாசில்தார்கள் கண்ணன் (கல்குளம்), முருகன் (திருவட்டார்), குமாரவேல் (விளவங்கோடு), அனிதா குமாரி (கிள்ளியூர்), தக்கலை உட்கோட்டத்திற்கு உள்பட்ட போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள், இந்து முன்னணி, சிவசேனா, இந்துமகா சபா, இந்து சேனா ஆகிய இந்து அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், விநாயகர் சதுர்த்தி விழாவை அமைதியாக நடத்த வேண்டும். சிலைகளை பூஜைக்கு வைக்க போலீசாரிடம் அனுமதி பெற வேண்டும். எந்தெந்த இடங்களில் சிலை வைப்பது குறித்த விவரத்தை ஆகஸ்டு மாதம் 14-ந் தேதிக்குள் கொடுக்க வேண்டும். மாசு கட்டுப்பாட்டுத்துறையின் நிபந்தனையின் படி விநாயகர் சிலைகள் இருக்க வேண்டும். ஊர்வலத்தில் பொக்லைன் வாகனத்தை பயன்படுத்தக்கூடாது என்பது உள்பட பல்வேறு நிபந்தனைகள் அறிவிக்கப்பட்டது.


Next Story