மானியத்துடன் தொழில் தொடங்க வேளாண் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்


மானியத்துடன் தொழில் தொடங்க வேளாண் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்
x

மானியத்துடன் தொழில் தொடங்க வேளாண் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரியலூர்

தொழில் தொடங்க மானியம்

அரியலூர் மாவட்டத்தில் 2023-24-ம் ஆண்டில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், தேர்வு செய்யப்பட்டுள்ள 40 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கிராம ஊராட்சிகளில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் பட்டப்பிரிவில் சான்று பெற்ற இளம் தொழில் முனைவோருக்கு, அக்ரி கிளினிக் அல்லது வேளாண் சார்ந்த தொழில் தொடங்குவதற்கு வேளாண் பட்டதாரி இளைஞர்களுக்கு 50 சதவீதம் அதிகபட்ச நிதி உதவியாக ரூ.1 லட்சம் பின்னேற்பு மூலதன மானியமாக வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் மானிய உதவி பெற விரும்பும் வேளாண்மை பட்டதாரிகளின் வயது 21-ல் இருந்து 40-க்குள் இருக்க வேண்டும். வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் பிரிவில் குறைந்தபட்சம் இளநிலையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் நிறுவனத்தில் பணியில் இருக்கக்கூடாது. விண்ணப்பதாரர் கணினித்திறன் பெற்றிருக்க வேண்டும். ஒரு குடும்பத்திற்கு ஒரு வேளாண் பட்டதாரி மட்டுமே நிதி உதவி பெற தகுதி உடையவர் ஆவார்.

விண்ணப்பிக்கலாம்

இதில் பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம், வேளாண் உட்கட்டமைப்பு நிதியின் கீழ் அனுமதிக்கக்கூடிய திட்டங்களின் அடிப்படையில் சுய தொழில்கள் தொடங்கலாம். இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு 50 சதவீத மானியமாக அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை பின்னேற்பு மூலதன மானியமாக வழங்கப்படும்.

எனவே தகுதியுடைய, தொழில் தொடங்க உள்ள வேளாண் பட்டதாரிகள் உரிய விண்ணப்பத்துடனும், விரிவான திட்ட அறிக்கையுடனும் கல்வி சான்றிதழ், ரேஷன் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களுடனும் வருகிற 31-ந் தேதிக்குள் அந்தந்த பகுதி வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.


Next Story