தேசிய கட்சிகளுடன் கூட்டணி... இன்னும் முடிவு செய்யவில்லை - டி.டி.வி.தினகரன்
இந்தியாவின் பிரதமரை தீர்மானிக்கும் கூட்டணியில் அ.ம.மு.க. இடம்பெறும் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-
"தேசிய கட்சிகளான பா.ஜ.க. அல்லது காங்கிரஸ் ஆகிய இரண்டில் ஏதாவது ஒன்றுடன் கூட்டணி சேர வாய்ப்புள்ளது. இது தேர்தல் ரீதியான கூட்டணிதான். கொள்கை ரீதியான கூட்டணி அல்ல. தேர்தலில் போட்டியிடுவது குறித்து நான் இதுவரை முடிவு செய்யவில்லை. ஆனால் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் நான் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். இந்தியாவின் பிரதமரை தீர்மானிக்கும் கூட்டணியில் அ.ம.மு.க. இடம்பெறும்."
இவ்வாறு டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story