"அமெரிக்கா போனும் - ஆட்டோவை எடு" - ஆட்டோவில் ஏறி அடம் பிடித்த நபர்..!


அமெரிக்கா போனும் - ஆட்டோவை எடு - ஆட்டோவில் ஏறி அடம் பிடித்த நபர்..!
x
தினத்தந்தி 19 Nov 2022 2:49 AM GMT (Updated: 19 Nov 2022 2:53 AM GMT)

சேலத்தில் ஆட்டோவை மறித்த நபர் ஒருவர், அமெரிக்கா செல்லவேண்டும்.. ஆட்டோவை எடு என கூறியதால், ஓட்டுநர் அதிர்ச்சியடைந்தார்.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் ஆட்டோ ஒன்றில் ஏறி, அமெரிக்கா செல்லவேண்டும். வண்டியை எடு என கூறியதால், ஓட்டுநர் அதிர்ச்சியடைந்தார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் சென்ற ஆட்டோவை மறித்த அந்த நபர், அமெரிக்கா செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த ஆட்டோ ஓட்டுநர், அமெரிக்காவெல்லாம் செல்லமுடியாது எனக்கூறி அவரை கீழே இறங்க வலியுறுத்தியுள்ளார்.

ஆனால், அந்த நபர் கீழே இறங்காததால், நீண்ட நேரமாக இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், கோபமடைந்த ஆட்டோ ஓட்டுநர், வலுக்கட்டாயமாக அந்த நபரை கீழே இறக்கி போலீசில் ஒப்படைத்தார்.


Next Story