கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து கூடுதலாக மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு
நாளை முதல் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
சென்னை,
சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ,
தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் நீண்ட தூரப் பேருந்துகள் 30.12.2023 முதல் கிளாம்பாக்கத்தில் புதிதாக திறக்கப்பட்ட கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வருகிறது.
இப்பேருந்து பேருந்து நிலையத்தை இணைக்கும் வகையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து தாம்பரம் ரெயில் நிலையத்திற்கு செல்லும் பொதுமக்களின் நலன் கருதி, தற்போது இயக்கப்பட்டு வரும் பேருந்துகளோடு, கூடுதலாக தடம் எண்.M18-ல் 6 பேருந்துகளை இடைநிறுத்தமில்லா பேருந்துகளாக 10 நிமிட இடைவெளியில் நாளை முதல் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட உள்ளது
Related Tags :
Next Story