பெங்களூருவில் இருந்து சென்னைக்கு95 கிலோ குட்கா கடத்திய வாலிபர் கைது


பெங்களூருவில் இருந்து சென்னைக்கு95 கிலோ குட்கா கடத்திய வாலிபர் கைது
x
தினத்தந்தி 21 Aug 2023 12:30 AM IST (Updated: 21 Aug 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூர் சிப்காட் போலீசார் நேற்று ஜூஜூவாடி சோதனைச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி வந்த தனியார் டிராவல்ஸ் பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது ஒரு அட்டைப் பெட்டியில் 95 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் விசாரணையில், சென்னையை சேந்த ஷபீர் (வயது 25) என்பவர் குட்கா பொருட்களை பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஷபீரை கைது செய்து, குட்கா பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.


Next Story