பள்ளி மாணவி பலாத்காரம்; கட்டிட மேஸ்திரி கைது


பள்ளி மாணவி பலாத்காரம்; கட்டிட மேஸ்திரி கைது
x

பள்ளி மாணவி பலாத்காரம்; கட்டிட மேஸ்திரி கைது

நாமக்கல்

மோகனூர்:

மோகனூர் பகுதியை சேர்ந்த 16 வயதுடைய பிளஸ்-1 மாணவியை காணவில்லை என அவருடைய பெற்றோர் மோகனூர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

இந்த நிலையில் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள மேட்டு மகாதானபுரத்தை சேர்ந்த மேஸ்திரி செந்தில்குமார் (வயது 22) என்பவர் மாணவி மேட்டு மகாதானபுரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு அடிக்கடி வந்தபோது ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.

இதையடுத்து செந்தில்குமாருடன் இருந்த பள்ளி மாணவியை மீட்ட போலீசார், மாணவியை கடத்தியதாக செந்தில்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மீட்கப்பட்ட மாணவி பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.


Next Story