தேன்கனிக்கோட்டை அருகே யூடியூப் சேனலில் அரசு திட்டங்கள் குறித்து வதந்தி பரப்பிய என்ஜினீயர் கைது
தேன்கனிக்கோட்டை அருகே யூடியூப் சேனலில் அரசு திட்டங்கள் குறித்து வதந்தி பரப்பிய என்ஜினீயர் கைது
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள நாகிரெட்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் ரெட்டி. இவருடைய மகன் ஜனார்த்தன ரெட்டி (வயது 22). என்ஜினீயர். இவர் யூடியூப் சேனல் தொடங்கி நடத்தி வருகிறார். இந்த நிலையில் ஜனார்த்தன ரெட்டி தமிழகத்தில் உள்ள பல்வேறு பிரபல நியூஸ் சேனல்களின் யூடியூப் வீடியோவை பதிவிறக்கம் செய்து அதனை தனது யூடியூப் சேனலில் பயன்படுத்தி அரசு திட்டங்கள் குறித்து வதந்தி பரப்பி அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சென்னை கிழக்கு தாம்பரம் பாரத மாதா தெருவை சேர்ந்த வீராசாமி மகன் கார்த்திக் என்பவர் சேலையூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனை தொடர்ந்து சேலையூர் போலீசார் நேற்று நாகிரெட்டிப்பாளையத்துக்கு வந்து ஜனார்த்தன ரெட்டியை கைது செய்து சென்னைக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.