ஜெயலலிதா மரண விவகாரம்: 14வது முறையாக கூடுதல் அவகாசம் கேட்கும் ஆறுமுகசாமி ஆணையம்


ஜெயலலிதா மரண விவகாரம்: 14வது முறையாக கூடுதல் அவகாசம் கேட்கும் ஆறுமுகசாமி ஆணையம்
x
தினத்தந்தி 2 Aug 2022 9:01 AM GMT (Updated: 2 Aug 2022 9:46 AM GMT)

ஜெயலலிதா மரணம் தொடர்பாக முழு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது.

சென்னை,

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்திற்கு 13-வது முறையாக வழங்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் நிறைவு பெறுகிறது.

இந்த நிலையில், எய்ம்ஸ் மருத்துவக்குழு ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதில் ஏற்பட்ட தாமதத்தினால், முழு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வேண்டும் என்று ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

அதன்படி, 3 வாரம் அவகாசம் கேட்டு தமிழக அரசுக்கு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக முழு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய, எய்ம்ஸ் மருத்துவ குழுவின் அறிக்கையும் அவசியம் என்பதால், அதனை பெற்ற பிறகு தமிழ்நாடு அரசிடம் அறிக்கையை தாக்கல் செய்ய ஆறுமுகசாமி ஆணையம் முடிவு செய்துள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.


Next Story