பெண் மீது தாக்குதல்
பெண்ணை தாக்கியவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருநெல்வேலி
ஏர்வாடி:
திருக்குறுங்குடி அருகே உள்ள மாவடியில் சி.எஸ்.ஐ. ஆலயத்தில் ஸ்தோத்திர பண்டிகை நடந்தது. இதையொட்டி மாவடி கீழத்தெருவை சேர்ந்த செல்வன் அப்பகுதியில் பிளக்ஸ் பேனர் வைத்திருந்தார். இதனை அதே பகுதியை சேர்ந்த கண்ணன் கிழித்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று செல்வன் வீட்டின் வழியாக கண்ணன், ரமேஷ், பென்னியமின் ஆகியோர் சென்று கொண்டிருந்தனர். இதைப்பார்த்த செல்வன் மனைவி அருணா ரத்தினாவதி (40) பிளக்ஸ் பேனரை ஏன் கிழித்தீர்கள் என கண்ணனிடம் கேட்டார். இதில் ஏற்பட்ட தகராறில் 3 பேரும் சேர்ந்து அருணா ரத்தினாவதியை தாக்கி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றிய புகாரின் பேரில் திருக்குறுங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story