கோவில்பட்டி, ஆறுமுகநேரியில்மகளிர் தினவிழா கொண்டாட்டம்


தினத்தந்தி 8 March 2023 6:45 PM GMT (Updated: 8 March 2023 6:45 PM GMT)

கோவில்பட்டி, ஆறுமுகநேரியில் மகளிர் தினவிழா கொண்டாட்டப்பட்டது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி நகரசபை அலுவலகத்திலும், ஆறுமுகநேரி நகர பஞ்சாயத்து அலுவலகத்திலும் மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது.

கோவில்பட்டி

கோவில்பட்டி நகரசபை அலுவலகத்தில் நேற்று மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது விழாவிற்கு நகரசபை தலைவர் கருணாநிதி தலைமை வகித்து, கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார். விழாவில் நகரசபை ஆணையாளர் ராஜாராம், பொறியாளர் ரமேஷ், சுகாதார அலுவலர் நாராயணன், மேலாளர் பெருமாள் மற்றும் அலுவலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோன்று கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரி குலேசன் பள்ளியில் மகளிர் தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவிற்கு நாடார் உறவின்முறைச் சங்கத் தலைவர் ஏ.பி.கே. பழனிச்செல்வம் தலைமை தாங்கினார். பள்ளி பொருளாளர் ஜெ. ரத்னராஜா முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக உதவி கலெக்டர் கே.மகாலட்சுமி கலந்து கொண்டு பெண்களின் தற்போதைய முன்னேற்றம், பல்வேறு துறைகளில் சாதித்து வருகின்ற சாதனைகள் பற்றியும், சுதந்திரத்திற்கு முன்பும், தற்போதைய நிலையையும் எடுத்துரைத்தார்.

பின்னர் கயிறு இழுத்தல், பந்து வீசுதல், இசை நாற்காலி, பெண்கள் தின படம் வரைதல், பெண்கள் முன்னேற்ற பாடல் பாடுதல், ஸ்லோ சைக்கிள் ரேஸ், நடனம், ஸ்லோ பைக் ரேஸ், கோலம், மெஹந்தி, சாக்கு ஓட்டம் போன்ற மகளிருக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தது. பள்ளி உறுப்பினர்கள் தாழையப்பன், தங்கமணி, பால்ராஜ், மனோகரன், செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளி முதல்வர் பிரபு நன்றி கூறினார்.

ஆறுமுகநேரி

ஆறுமுகநேரி நகர பஞ்சாயத்து அலுவலகத்தில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் தின விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஆறுமுகநேரி பகுதிகளில் உள்ள பெண் கவுன்சிலர்கள், பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு நகர பஞ்சாயத்து தலைவர் கலாவதி கல்யாண சுந்தரம் தலைமை தாங்கினார். நகர பஞ்சாயத்து துணை தலைவர் கல்யாண சுந்தரம், நிர்வாக அதிகாரி கி. கணேசன் ஆகியோர் முன்னில வகித்தனர். நகர பஞ்சாயத்து பெண் உறுப்பினர் தயாபதி ஜோசப் வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் நகர பஞ்சாயத்து பணியாற்றும் பெண் ஊழியர்கள், மகளிர் கூட்டமைப்பின் பெண்கள், சுய உதவிக் குழு பெண்கள், அடைக்கலாபுரம் பெண்கள் பணி குழு சேர்ந்த பெண்கள், மடத்துவிளை தீபஜோதி மகளிர் கூட்டமைப்பு பெண்கள் ஆகியோர் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சியாக நடனம், ஆட்டம் பாட்டம், அனல் பறக்கும் பேச்சு ஆகியவை நடத்தினர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மகளிருக்கு நகர பஞ்சாயத்து தலைவி நினைவு பரிசுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் பெண்கள் சம உரிமை பற்றியும், பெண் விழிப்புணர்வு பற்றியும், பெண்கள் பேசினர். நகர பஞ்சாயத்து தலைவிக்கு மகளிர் சுய உதவி குழு பெண்கள் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது.


Next Story