உத்தமபாளையத்தில் செஸ் ஓலிம்பியாட் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்


உத்தமபாளையத்தில்  செஸ் ஓலிம்பியாட் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்
x

உத்தமபாளையத்தில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடந்தது

தேனி

சென்னை மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28-ந் தேதி தொடங்கி நடைபெறுகிறது. இதையொட்டி செஸ் ஒலிம்பியாட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி தேனி மாவட்டத்திலும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் உத்தமபாளையம் கருத்த ராவுத்தர் கவுதியா கல்லூரியில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடந்தது. இதற்கு கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கலெக்டர் முரளிதரன் பதாகையில் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். இதையடுத்து கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கையெழுத்திட்டனர்.


Next Story