தடகள வீரர் செல்வபிரபு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்
தேசிய அளவில் தங்கம் வென்ற தடகள வீரர் செல்வபிரபு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
சென்னை,
தமிழகத்தைச் சேர்ந்த தடகள விளையாட்டு வீரர் செல்வபிரபு, கடந்த ஆண்டு நடைபெற்ற டிரிப்பிள் ஜம்ப் தடகள போட்டியில் 20ஆவது தேசிய ஜூனியர் பெடரேஷன் கோப்பை போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.
மேலும், 4வது கேலோ இந்தியா இளைஞர் போட்டியில் தங்கப் பதக்கம், 20 வயதிற்குட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப் கலி கொலம்பியா போட்டியில் வெள்ளிப் பதக்கம் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச போட்டிகளில் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார். இந்நிலையில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினை செல்வபிரபு சந்தித்து வாழ்த்துப் பெற்றுள்ளார்.
Related Tags :
Next Story