விழிப்புணர்வு பேரணி
விழிப்புணர்வு பேரணி நடந்தது.
வள்ளியூர்:
வள்ளியூர் அருகே தெற்கு கள்ளிகுளத்தில் சமூகரெங்கபுரம் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் புகையிலை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி மற்றும் கலை நிகழ்ச்சி நடந்தது. தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா ஆலய தர்மகர்த்தா டாக்டர் ஆனந்த் தலைமை தாங்கினார். தெற்கு கள்ளிகுளம் பஞ்சாயத்து தலைவி மரிய பிரமிளா, தெற்கு கள்ளிகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ஜெயம் பெல்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் சுரேஷ் தங்கராஜ் தாம்சன் வரவேற்றார். பேரணியை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி தெற்கு கள்ளிகுளம் காமராஜ் நடுநிலைப்பள்ளி முன்பிருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று பஸ் நிறுத்தம் வந்தடைந்தது. புகையிலைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடந்த ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கல்லூரி தாளாளர் ஹெலன் லாரன்ஸ் பரிசுகள் வழங்கினார். இதில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் அஜின், பஞ்சாயத்து உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் முகமது இபாம் நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம், இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் ரோட்டரி சங்க ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.