அரியாற்றங்கரையில் உடைப்பு; வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது


அரியாற்றங்கரையில் உடைப்பு; வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது
x

அரியாற்றங்கரையில் உடைந்ததால் வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது.

திருச்சி

உபரிநீர் திறப்பு

கர்நாடக மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக கடந்த மாதம் மேட்டூர் அணை நிரம்பியது. இதையடுத்து அந்த அணைக்கு வந்த நீர் முழுவதும் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதையடுத்து திருச்சி மாவட்டம் முக்கொம்புக்கு வந்த தண்ணீர் காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் திறக்கப்பட்டது. இதனால் அந்த ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

தொடர்ந்து ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்லும் நிலையில், காவிரி ஆற்றில் வரும் உபரிநீர் வாய்க்கால்களில் திறந்து விடப்பட்டுள்ளது. இதில், நவலூர் குட்டப்பட்டில் பிரிந்து அரியாற்றில் செல்லும் உபரி நீர் புங்கனூர் கலிங்கியில் வழிந்து, வயல்வெளியில் பாய்ந்து வருகிறது.

கரை உடைந்தது

இந்நிலையில் இனியானூர் அருகில் உள்ள வர்மாநகர் செல்லும் அரியாற்றங்கரையில் நேற்று காலை உடைப்பு ஏற்பட்டு, அந்த பகுதியை தண்ணீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மேலும் கரையையொட்டி கட்டப்பட்டுள்ள வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது.

அரியாற்றங்கரையில் ஆக்கிரமிப்புகள் உள்ளதால், அப்பகுதியில் உடைப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதற்கிடையே அரியாற்றங்கரையில் உடைப்பு ஏற்பட்ட இடத்தையும், தண்ணீர் வழிந்தோடிய பகுதியையும் மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் பார்வையிட்டு, உடைப்பினை உடனடியாகச் சரிசெய்திட நீர்வளத்துறை பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார். அப்போது நீர்வளத்துறை செயற்பொறியாளர் நித்தியானந்தம், உதவி செயற்பொறியாளர் ஜோதி, ஸ்ரீரங்கம் தாசில்தார் குணசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


Next Story