தமிழகத்தில் 25 தொகுதிகளில் பா.ஜ.க. நேரடியாக போட்டி: நயினார் நாகேந்திரன்


தமிழகத்தில் 25 தொகுதிகளில் பா.ஜ.க. நேரடியாக போட்டி:  நயினார் நாகேந்திரன்
x

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியனுடன், பா.ஜ.க தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டிலும் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இந்தநிலையில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக நேற்று தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியனுடன், தமிழக பா.ஜ.க தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். சென்னை சூளைமேட்டில் உள்ள ஜான் பாண்டியன் இல்லத்தில் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன்,

தமிழகத்தில் 25 தொகுதிகளில் பா.ஜ.க. நேரடியாக போட்டியிடும். நெல்லை தொகுதியில் என்னை வேட்பாளராக நிறுத்தினால் நிற்பேன். என தெரிவித்துள்ளார்.


Next Story