திருப்பாதிரிப்புலியூர் வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது திரளான பக்தர்கள் பங்கேற்பு


திருப்பாதிரிப்புலியூர்    வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது  திரளான பக்தர்கள் பங்கேற்பு
x

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

கடலூர்



கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பிரம்மோற்சவ விழா 12 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று முன்தினம் திருமஞ்சனம், அனுக்ஞை, வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம் நடந்தது. நேற்று காலை 5 மணிக்கு திவ்யபிரபஞ்சசேவை, 6 மணிக்கு காப்பு கட்டுதல்,


அதன்பிறகு பெருமாள் திருமலையப்பன் அலங்காரத்தில் கோவில் கொடி மரம் அருகில் வந்தார். தொடர்ந்து காலை 7 மணி அளவில் கோவில் கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு 7 மணிக்கு ஹம்ச வாகனத்தில் சாமி வீதி உலா நடந்தது. இன்று (புதன்கிழமை) திருப்பல்லக்கு, இரவு 7 மணிக்கு சூரிய பிரபை, நாளை (வியாழக்கிழமை) திருப்பல்லக்கு-ராஜகோபாலன் சேவை, இரவு சேஷ வாகனத்தில் சாமி வீதி உலா நடக்கிறது.

தேரோட்டம்

தொடர்ந்து ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடக்கிறது. 11-ந்தேதி சூர்ணாபிஷேகம், 108 கலச திருமஞ்சனமும், 12-ந்தேதி வெண்ணெய்த்தாழி உற்சவம், வேடுபரி உற்சவம் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 13-ந்தேதி (புதன்கிழமை) நடக்கிறது. 300 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக தேரோட்டம் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. அன்று 11 மணிக்கு பிறகு தீர்த்தவாரியும், 14 மற்றும் 15-ந்தேதிகளில் திருமஞ்சனமும், திருக்கல்யாண உற்சவமும், 16-ந்தேதி விடையாற்றி உற்சவமும் நடக்கிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை தக்கார் சுபத்ரா, செயல் அலுவலர் ரமேஷ்பாபு மற்றும் கோவில் பணியாளர்கள், பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


Next Story