ரெயில்வே என்ஜினீயர் வீட்டில் திருட்டு
ரெயில்வே என்ஜினீயர் வீட்டில் திருட்டு
விழுப்புரம்
விழுப்புரம் சாலாமேடு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் விழுப்புரம் ரெயில் நிலையத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். கோடை விடுமுறை என்பதால் இவரது மனைவி மற்றும் பிள்ளைகள் திருவண்ணாமலையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டனர். இதனால் விஜயகுமார் மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்தார்.
இந்த நிலையில் விஜயகுமார் நேற்று முன்தினம் காலை வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் முன் பக்க கதவில் போடப்பட்ட பூட்டு உடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த டி.வி., கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் விஜயகுமார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டி.வி. உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.