கால்நடை மருத்துவ முகாம்


கால்நடை மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 9 Nov 2022 7:30 PM GMT (Updated: 9 Nov 2022 7:30 PM GMT)

கால்நடை மருத்துவ முகாம்

நாகப்பட்டினம்

கீழையூர் ஒன்றியம் வாழக்கரை ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை மருத்துவம் மற்றும் சுகாதார, விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் கலைசெழியன் தலைமை தாங்கினார். கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் சஞ்சீவ்ராஜ், உதவி இயக்குனர் அசன் இப்ராஹிம், கால்நடை மருத்துவர் சுப்பையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் 800 கால்நடைகளுக்கு பரிசோதனை செய்து தடுப்பூசி, சினை பரிசோதனை, குடற்புழு நீக்கம் உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. சிறந்த கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முகாமில் கருங்கண்ணி கால்நடை உதவி டாக்டர் கவின், கால்நடை ஆய்வாளர் அன்பிற்கரசி, கால்நடை பராமரிப்பு உதவியாளர் விமலா ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story