ஆசிரியரை தாக்கிய வழக்கில் பெண்கள் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு


ஆசிரியரை தாக்கிய வழக்கில் பெண்கள் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு
x

கும்மிடிப்பூண்டி அருகே ஆசிரியரை தாக்கிய வழக்கில் முதற்கட்டமாக பெண்கள் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருவள்ளூர்

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டி அடுத்த குருவராஜகண்டிகை கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வரும் மாணவனை கடந்த 7-ந் தேதி தற்காலிக ஆசிரியரான மோகன் (வயது 36) என்பவர் சரியாக படிக்கவில்லை எனக்கூறி பிரம்பால் அடித்துள்ளார்.

இதில் மாணவனின் கை, கால்கள் வீங்கி இருப்பதை கண்ட பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். இது தொடர்பாக மாணவனின் பெற்றோரும், உறவினரும், கிராம மக்களுடன் பள்ளிக்கு நேரில் சென்று தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அங்கு கூடி நின்ற உறவினர்கள், பொதுமக்கள் ஆசிரியர் மோகனை கடுமையாக தாக்கினர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தாக்குதலுக்குள்ளான ஆசிரியர் மோகனை மீட்டு சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் மாணவனின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், ஆசிரியர் மோகன் மீதும், ஆசிரியர் மோகன் கொடுத்த புகாரின் பேரில், மாணவனின் தரப்பை சேர்ந்த 4 பெண்கள் உள்பட மொத்தம் 8 பேர் மீதும் முதற்கட்டமாக கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story